கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடியைத் தொடர்ந்து கைது
அன்பில் மகேஸின் முன் ஜாமீன் மனு இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அவரை இன்று மாலை சென்னை அமைந்தகரையில் கைது செய்தனர். தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Anbil Mahesh arrest குறித்து வெளியிட்ட கண்டனத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு அன்பில் மகேஸ் முழு ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கைது நடவடிக்கை மூலம் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஆளும் அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார் என்றும், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பலாம் என்ற த.வெ.க. அரசின் எண்ணம் ஈடேறாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
































