ஜெயராம் மற்றும் அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கியுள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார். ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை
மூவிட்ரோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்துக்குமார் இசையமைக்கிறார். குடும்ப உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய மனித உறவுகளை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நகைச்சுவை, பாசம் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் இடம்பெறும் பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. Kalyani Anil Tamil cinema debut இடம்பெறும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின்போது உருவான மறக்க முடியாத நினைவுகளைப் பகிரும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.





























