திருமுல்லைவாசலில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு
திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜலேந்திரன் (58) மீனவராகவும், முன்னாள் கிராமத் தலைவராகவும் இருந்தார். அவரது மனைவி மலர்செல்வி (48), மகள் அனு (29), மகன் அதிகுணன் (25) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அதிகுணனை ஜலேந்திரன் இரும்புக் குழாயால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சத்தம் கேட்டு எழுந்த மலர்செல்வியையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் உயிரிழந்த பின்னர், வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் ஜலேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
காலையில் ஜலேந்திரன் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டார்.
ஜலேந்திரனுக்கும் மலர்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். மகள் அனுவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். Sirkazhi triple death சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

































