தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன், சந்தியா தம்பதியினரின் மகன் முத்துவேலன். இவர் வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை தினமான நேற்று காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சிறுவன், மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து உறவினர்களும் கிராம மக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இன்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது, அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சிறுவன் மரணம் குறித்து போலீசார் விசாரணை
சிறுவனின் உடல் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. Melur boy death case தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுவனின் கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம் மற்றும் கண்ணுக்குக் கீழே கருமை நிறக் காயம் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால், சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலைப் பெறமாட்டோம் என்றும் கூறினர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
































