கல்வி ஆய்வு மற்றும் புதிய சிந்தனைகளுக்கான மேடை
“Research and Innovation in Diverse Global Education” என்ற கருப்பொருளில் நடைபெறும் Gateway Graduate School Research Symposium, கல்வியில் வலுவான ஆய்வுக் கலாசாரத்தை உருவாக்குவதையும் பல்துறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி எதிர்கொள்ளும் சமகால சவால்கள் தொடர்பான ஆய்வுகளையும் புதிய அணுகுமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பும் இதில் வழங்கப்படும்.
உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் டாக்டர் ஹர்ஷா அதுருபானவும், அவுஸ்திரேலியாவின் ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி விரிவுரையாளர் டாக்டர் ரோசி பின்டே ரஹ்மத்தும் முக்கிய உரையாற்ற உள்ளனர்.
ஐந்து சிறப்பு ஆய்வுப் பிரிவுகளில் இணை அமர்வுகள் நடைபெறும். பேராசிரியர் பிரசாத் செதுங்க, சன்துஷ் வீரமான், விஷாகா நானாயக்கார, டாக்டர் ரோசி பின்டே ரஹ்மத் மற்றும் நிர்மலி விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
மாணவர்களுக்கான ஆய்வு பிரிவு மற்றும் பயிற்சியும் கருத்தரங்கின் சிறப்பம்சமாகும். “School Research & Innovation” என்ற கருப்பொருளில் பாடசாலை மாணவர்கள் தங்கள் ஆய்வுகளையும் கருத்துகளையும் முன்வைக்கலாம். “The Research Mindset: Preparing for University and Beyond” என்ற பயிற்சியை விதுஜித் விதானகே நடத்த உள்ளார். பதிவுகளுக்கு மாநாட்டு செயலாளர் இசுரி கத்திரிஆராச்சியை +94 76 425 6356 என்ற எண்ணிலோ isuri.kathriarachchi@gateway.lk மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.





























