22 வயதில் தொடங்கிய உடல்நலப் போராட்டம்
நியூ சவுத் வேல்ஸ் அணியில் விளையாடியபோது, 22 வயதில் கவாஜாவுக்கு ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இடது முழங்காலில் ஏற்பட்ட கடுமையான வலிக்கான காரணத்தை மருத்துவர்கள் முதலில் கண்டறிய முடியாத நிலையில், தமக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இருக்கலாம் என்று அவர் அஞ்சினார்.
ஒரு கட்டத்தில், குளியலறை வரை 10 மீட்டர் நடக்க முடியாத நிலைக்கு சென்றதாக கவாஜா கூறியுள்ளார். வழக்கமான ஊசி சிகிச்சை தொடங்கிய பின்னர், சுமார் ஆறு மாதங்களில் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் திரும்பினார். அந்த மருந்து இல்லையெனில் மீண்டும் கிரிக்கெட் விளையாடியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு சிறப்பு சலுகை வழங்கப்படக் கூடாது என்பதற்காக, மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் மட்டும் உடல்நிலை குறித்து தெரிவித்ததாகவும், எந்த வீரரிடமும் கூறவில்லை என்றும் கவாஜா தெரிவித்துள்ளார். Usman Khawaja rheumatoid arthritis பாதிப்பை சமாளித்தபடியே ஆஸ்திரேலிய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
அவர் 6,229 டெஸ்ட் ஓட்டங்களையும் 16 சதங்களையும் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரரும் முதல் முஸ்லிம் வீரரும் கவாஜா ஆவார். ஜனவரி 2026-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தனது அனுபவங்களை ‘Sabr’ என்ற சுயசரிதையில் பகிர உள்ளார்.






























