ஹோட்டல் குத்தகை நீட்டிப்பில் ஏற்பட்ட தகராறு
கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர், அதன் உரிமையாளர் ஹெலனா பராலியிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவுக்கும் கோகாயிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஹெலனா தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு ஹோட்டலுக்கு வந்திருந்தார். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மோதல் ஏற்பட்டது. பின்னர் கோகோய் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Guwahati hotel shooting சம்பவத்தில் ஹெலனா பராலி, அவரது சகோதரர் புதேவ் பராலி, மகன் தேவர்ஷி காஷ்யப், மருமகள் ரினிகி காஷ்யப் மற்றும் கார் ஓட்டுநர் நாராயண் தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹோட்டல் பராமரிப்பாளர் சத்யேந்திர பதக் காயமடைந்தார்.
இரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கவுகாத்தி போலீஸ் கமிஷனர் டாக்டர் பார்த்த சாரதி மஹந்தா தெரிவித்தார். ஆறு பேர் காயமடைந்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணையில் ஹோட்டல் குத்தகை பிரச்சினையே காரணமாகத் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். போலீஸார் கோகாயைக் கைது செய்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.





























