ஷேர் ஆட்டோவில் பயணித்த கைதி
தேனி மாவட்டம் கானா விளக்கைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்ன காளையின் வாகனத்தில், பயணியுடன் பயணியாக லிங்க பிரசாத் ஏறியுள்ளார். கானா விளக்கில் இறங்குவதாகவும், கையில் பணம் இல்லை என்பதால் ஒருவரிடம் கூகுள் பே மூலம் பணம் செலுத்தச் சொல்வதாகவும் அவர் ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆட்டோ மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள மருந்துக் கிடங்கு பகுதியில் சென்றபோது, காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வழிமறித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த லிங்க பிரசாத்தை போலீசார் பிடித்தபோதுதான், அவர் சிறையிலிருந்து தப்பிய கைதி என்பது ஓட்டுநருக்குத் தெரியவந்தது.
பின்னர் லிங்க பிரசாத் காவல்துறையினருடன் தக்கம்பட்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Theni prison escape தொடர்பான தேடுதல் நடவடிக்கையில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார்.































