நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அழைப்பில், 2017 ஆகஸ்டில் காவல்துறையில் இணைந்ததிலிருந்து அழிவு, மரணம் மற்றும் மன உளைச்சல்களை சந்தித்ததாக லாமார்-கொண்டன் கூறினார். பணியிடத் துன்புறுத்தல் மற்றும் போதிய ஆதரவு இல்லாமை காரணமாக தூக்கமின்மை, பதற்றம் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் ஏற்கனவே ஒன்றரை ஆண்டாக உளவியல் நிபுணரை சந்தித்து வந்ததாக கூறியதுடன், தனது தொலைபேசி விரைவில் கைப்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க ஒருவர் தன்னை வாகனத்தில் அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், 2025 ஜூன் மாதம் லாமார்-கொண்டன் எழுதிய அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அதில், உடல்களை மறைக்க முயன்றதில் தன்னுடன் இருந்ததாகக் கூறப்படும் பெண் உதவியதாக அவர் குற்றஞ்சாட்டினார். அந்த பெண் நீதிமன்றத்தில் இதை மறுத்துள்ளார்.
ஜெஸி பேர்ட் மற்றும் லூக் டேவிஸ் ஆகியோரின் உடல்கள் 2024 பிப்ரவரியில் சிட்னிக்கு தெற்கிலுள்ள புங்கோனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. Beau Lamarre-Condon trial ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.































