ரவி கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அவரது மகன் ராகுல் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவும் மதுபோதையில் இருந்த ராகுல், தூங்கிக் கொண்டிருந்த ரவியைத் தட்டியெழுப்பி தகராறு செய்துள்ளார்.
தந்தை உயிரிழப்பு; மகன் கைது
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த ராகுல், ரவியை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது கழுத்தைப் பிடித்து நெரித்ததில் ரவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் ரவி உயிரிழந்தார்.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக ரவியின் உடல் மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வாணியம்பாடி நகரப் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ராகுலைக் கைது செய்தனர். இந்த Vaniyambadi murder case சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




























