West Bank crossings closure நடவடிக்கையுடன், யூதேயா மற்றும் சமாரியா, ஜோர்டான் பள்ளத்தாக்கு, தொழில்துறை மண்டலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாலஸ்தீன தொழிலாளர்களின் நுழைவு மற்றும் வெளியேற்றத்துக்கும் தடை அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதலே பெரும்பாலான தொழிலாளர்கள் குடியேற்றப் பகுதிகளுக்குள் செல்ல முடியாது. தொழில்துறை மண்டலங்கள் மற்றும் சில வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹெப்ரோனில் தொடரும் ராணுவ நடவடிக்கை
மேற்குக் கரையில் பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய சோதனைச்சாவடி தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர்; தாக்குதலாளிகள் இருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரிய அளவிலான நடவடிக்கையை அறிவித்தார்.
ஹெப்ரோன் நகரில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் சுமார் 2,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார். நகரின் சுமார் 2,00,000 குடியிருப்பாளர்களின் நடமாட்டமும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக ஹெப்ரோன் மேயர் யூசுப் அல்-ஜஅபரி குற்றம்சாட்டினார். இதற்கிடையில், தெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றனர். நான்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.






























