சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று நடைபெற்ற 15ஆம் நாள் அகழ்வில் மேலும் 5 புதிய என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 6 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 34 என்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் புதைகுழிக்குள் இரண்டு இடங்களில் என்புக் குவியல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். ருகுணு பல்கலைக்கழக மாணவர்களும் இந்த அகழ்வுப் பணிகளில் இணைந்துள்ளதால் ஆய்வுத் தளம் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழியில் நடத்தப்பட்ட அனைத்து கட்ட அகழ்வுகளிலும் மொத்தமாக 275 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 272 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading