பிரிட்டன் மாணவர் விசா, பிரிட்டன் UK அரசு Student Visa பெற்றுள்ள சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது கல்விப் பாடநெறி தொடங்கும் தேதியை அடிப்படையாகக் கொண்டு அல்ல விசாவில் (Visa) குறிப்பிடப்பட்டுள்ள Start Date க்கு முன் பிரிட்டனுக்குள் நுழையக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை மீறினால், நாட்டிற்குள் நுழைவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
பிரிட்டன் அரசின் Student Visa விதிகளின்படி 6 மாதங்கள் அல்லது அதற்கு குறைவான பாடநெறியில் சேரும் மாணவர்கள் பாடநெறி தொடங்குவதற்கு அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு முன் பயணம் செய்யலாம். 6 மாதங்களுக்கு மேற்பட்ட பாடநெறிகளில் சேரும் மாணவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு முன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் இந்த அனுமதி இருந்தாலும் விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள Visa Start Date-க்கு முன் பிரிட்டனுக்குள் செல்ல முடியாது.
பிரிட்டன் மாணவர் விசா பெறுவதற்கு விண்ணப்பதாரர் குறைந்தது 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் சேர்க்கை படிப்பு மற்றும் வாழ்வுச் செலவுகளுக்கான நிதி ஆதாரம் ஆங்கில மொழித் திறன் ஆகியவை அவசியமாகும். 16 அல்லது 17 வயதுடைய விண்ணப்பதாரர்கள் பெற்றோரின் சம்மதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.













Leave a Reply