September 8, 2026
Breaking News
ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம்
முகப்பு Article செய்தி
சுவிட்சர்லாந்தின் Dublin நடைமுறை 2026
Article

சுவிட்சர்லாந்தின் டப்ளின் நடைமுறை முழுமையான விளக்கம் (2026)

📅 வெளியீடு: 15 Jun 2026 20:15 🔄 புதுப்பிப்பு: 28 Aug 2026 17:45 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

டப்ளின் நடைமுறை என்பது ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் அமலில் உள்ள ஒரு அகதி மற்றும் தஞ்சக்கோரிக்கை (Asylum) ஒப்பந்த அமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம் ஒரு நபரின் அகதி விண்ணப்பத்தை ஒரே ஒரு நாடு மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என்பதைக் உறுதி செய்வதாகும். ஒரே நபர் பல நாடுகளில் மீண்டும் மீண்டும் அகதி கோரிக்கை செய்ய முடியாத வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சுவிட்சர்லாந்தும் இந்த Dublin அமைப்பில் உறுப்பினராக உள்ளது.

Dublin பகுதி தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் சேர்த்து சுவிட்சர்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்செண்ஸ்டெய்ன் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. மொத்தம் 31 நாடுகள் இந்த அமைப்பில் பங்கேற்கின்றன.

Dublin நடைமுறை எப்போது பொருந்தும்?

நீங்கள் ஒரு ஐரோப்பிய அல்லாத நாட்டின் குடிமகனாக இருந்து சுவிட்சர்லாந்தில் அகதி கோரிக்கை செய்தால் SEM (State Secretariat for Migration) முதலில் சுவிட்சர்லாந்தே உங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டிய நாடா என்பதை ஆய்வு செய்யும்.

பின்வரும் சூழ்நிலைகளில் மற்றொரு Dublin நாடு பொறுப்பேற்கலாம்

  • நீங்கள் முதலில் வேறு ஒரு Dublin நாட்டில் கைரேகை பதிவு செய்திருந்தால்.
  • ஏற்கனவே வேறு ஒரு Dublin நாட்டில் அகதி கோரிக்கை செய்திருந்தால்.
  • வேறு ஒரு Dublin நாட்டின் விசா அல்லது குடியிருப்பு அனுமதி (Residence Permit) பெற்றிருந்தால்.
  • ஐரோப்பாவிற்குள் முதலில் நுழைந்த நாடு வேறு ஒன்றாக இருந்தால்.
  • உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு Dublin நாட்டில் சட்டபூர்வமாக வசித்தால்.

தரவுகள் யூரோடக் (Eurodac) தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை கொண்டு சரிபாக்கப்படுகின்றன, ஒருவர் அகதி கோரிக்கை செய்தவுடன் அல்லது சில சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய எல்லையை சட்டவிரோதமாகக் கடந்து அவர்களின் கைரேகை அமைப்பில் சேமிக்கப்படுகின்றன. Dublin நாட்டில் அகதி கோரிக்கை செய்திருக்கிறாரா அல்லது கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க முடியும்.

இதன் மூலம் ஒரு அகதி விண்ணப்பத்தை எந்த நாடு Dublin அமைப்புக்கு உதவுகிறது. உதாரணமாக ஒருவர் முதலில் இத்தாலியில் கைரேகை பதிவு செய்து பின்னர் சுவிட்சர்லாந்தில் அகதி கோரிக்கை செய்தால் Eurodac பதிவுகளில் கண்டறியப்பட்டு இத்தாலியே அந்த வழக்கை பரிசீலிக்க பொறுப்பான நாடாக கருதப்படலாம்.

சுவிட்சர்லாந்தில் Dublin நடைமுறை எப்படி நடைபெறும்?

ஆரம்ப பதிவு

அகதி கோரிக்கை சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டவுடன், குடியேற்றத்திற்கான மாநில செயலகமான (SEM) அதிகாரிகள் விண்ணப்பதாரரில அடையாள விவரங்கள் அவர் பயணம் செய்த நாடுகள் மற்றும் பயண பாதை குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் மேலும் Eurodac உள்ளிட்ட தரவுத்தளங்களில் உள்ள முந்தைய கைரேகை பதிவுகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்கிறார்கள். அடிப்படையில் Dublin விதிகளின்படி எந்த நாடு அந்த அகதி விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறுப்பானது என்பதை SEM தீர்மானிக்கும். Dublin நடைமுறையின் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

Dublin நேர்காணல்

  • எந்த நாடுகள் வழியாக வந்தீர்கள்?
  • ஏற்கனவே அகதி கோரிக்கை செய்துள்ளீர்களா?
  • குடும்பத்தினர் எங்கு உள்ளனர்?
  • ஏன் சுவிட்சர்லாந்து உங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்?

பொறுப்பான நாட்டை கண்டறிதல்

வேறு ஒரு Dublin நாடு பொறுப்பானது என்று SEM கருதினால் அந்த நாட்டிடம் “பொறுப்பு எடுத்துக்கொள்” அல்லது “திரும்பப் பெறு” கோரிக்கை அனுப்பப்படும்.

முடிவில்

அனுப்பப்பட்ட கோரிக்கை மூலம் மற்ற நாடு பொறுப்பை ஏற்றுக்கொண்டால்

  • சுவிட்சர்லாந்து உங்கள் அகதி விண்ணப்பத்தை பரிசீலிக்காது.
  • “Non-Entry Decision (NEM/NEE)” வழங்கப்படும்.
  • உங்களை அந்த நாட்டிற்கு மாற்ற Dublin Transfer நடவடிக்கை எடுக்கப்படும்.
Dublin Transfer என்றால் என்ன?

சுவிட்சர்லாந்து பொறுப்பல்ல என முடிவு செய்யப்பட்டால் நீங்கள் பொறுப்பான Dublin நாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். உதாரணமாக நீங்கள் இத்தாலியிலிருந்து கைரேகையுடன் வந்தவராயின்

  • இத்தாலியில் முதலில் கைரேகை
  • பின்னர் சுவிட்சர்லாந்தில் அகதி கோரிக்கை

இந்நிலையில் பெரும்பாலும் இத்தாலி பொறுப்பான நாடாக கருதப்படும்.

Dublin வழக்கில் உங்கள் உரிமைகள்

Dublin நடைமுறையின் கீவ கோரிக்கையாளர்களுக்கு பல முக்கிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் இலவச சட்ட உதவியைப் பெற முடியும். அதிகாரிகளுடனான நேர்காணல்கள் மற்றும் நடைமுறைகளில் புரிதலை எளிதாக்க இலவச மொழிபெயர்ப்பாளர் சேவையும் வழங்கப்படும்.

மேலும், தங்குமிடம் தேவையான மருத்துவ சேவைகள் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் நிதி உதவியும் கிடைக்கக்கூடும். இதனுடன் சுவிட்சர்லாந்தின் (SEM) வழங்கும் முடிவுடன் உடன்படவில்லை என்றால் அந்த முடிவுக்கு எதிராக சட்டரீதியாக முறையீடு செய்யும் உரிமையும் அகதி கோரிக்கையாளர்களுக்கு உள்ளது.

சுவிட்சர்லாந்து எப்போது தானாகவே வழக்கை ஏற்கும்?

சில விசேட சூழ்நிலைகளில் மற்றொரு Dublin நாடு பொறுப்பானதாக இருந்தாலும் சுவிட்சர்லாந்து மனிதாபிமான அடிப்படையில் வழக்கை தானாக ஏற்கலாம்.

  • குடும்ப ஒருங்கிணைப்பு
  • உடல்நலப் பிரச்சினைகள்
  • குழந்தைகளின் நலன்
  • அந்த நாட்டில் மனிதாபிமான மீறல் அபாயம்

இருந்தால் சுவிட்சர்லாந்து வழக்கை தானே பரிசீலிக்க முடியும். இது “Sovereignty Clause” என அழைக்கப்படுகிறது.

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது

Dublin விதி என்பது உங்கள் அகதி கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதல்ல. அது எந்த நாடு உங்கள் அகதி விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்? என்பதையே தீர்மானிக்கிறது. சுவிட்சர்லாந்து பொறுப்பான நாடாக இல்லாவிட்டால் உங்கள் கோரிக்கை மற்றொரு Dublin நாட்டில் தொடர்ந்து பரிசீலிக்கப்படும்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading