சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பிரான்சில் தேவையற்ற வணிக Commercial தொலைபேசி அழைப்புகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் 2026 ஆகஸ்ட் 11 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி நிறுவனங்கள் பொதுவாக விற்பனை நோக்கில் பொதுமக்களை திடீரென தொலைபேசியில் தொடர்புகொள்வது தடை செய்யப்படுகிறது.

புதிய விதிகளின் கீழ் இரண்டு சூழ்நிலைகளில் மட்டும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நோக்கில் அழைக்க அனுமதிக்கப்படும். ஒன்று, ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் வாடிக்கையாளருக்கு ஒப்பந்தம் இருந்தால் அதனுடன் தொடர்புடைய சேவைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்குவதற்காக. மற்றொன்று அந்த நபர் முன்கூட்டியே தெளிவான மற்றும் சுதந்திரமான சம்மதத்தை வழங்கியிருந்தால் மட்டுமே. அந்த சம்மதத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறும் உரிமையும் வாடிக்கையாளருக்கு இருக்கும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

மேலும், அனுமதிக்கப்பட்ட அழைப்புகளுக்குக் கூட தற்போது நடைமுறையில் உள்ள நேரக்கட்டுப்பாடுகள் தொடரும். அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மற்றும் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே அழைக்க முடியும். சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விற்பனை அழைப்புகள் அனுமதிக்கப்படாது.

இந்த புதிய விதிகளை மீறி மேற்கொள்ளப்படும் தொலைபேசி விற்பனையின் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளரின் சம்மதம் பெறப்பட்டதற்கான ஆதாரத்தை நிறுவனம் நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் நிறுவனங்களுக்கே இருக்கும். பிரான்சில் தேவையற்ற வணிக..

இதுவரை தேவையற்ற விற்பனை அழைப்புகளைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்ட Bloctel சேவை இந்த புதிய பொதுத் தடை அமலுக்கு வருவதால் 2026 ஆகஸ்ட் 11 முதல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்