September 19, 2026
Breaking News
திருகோணமலையில் மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவர் கைது ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படாது: பிரதமர் ஹரினி தேர்வில் ChatGPT பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை ஜெமினி ஏஐ சோதனையில் மூன்று நிறுவனங்களுக்குள் ஊடுருவல் மழைநீர் சேகரிப்பை நாடு முழுவதும் முன்னெடுக்க சங்கக்காரா அழைப்பு டெலிகிராம் குழு நிதி மோசடி: 38 வயது பெண் கைது இலங்கையின் தென்மேற்கில் செப்டம்பர் 19 முதல் மழை அதிகரிக்கும் ரஷ்ய எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி: டிரம்ப் சட்டத்தில் கையெழுத்து கிரீன்லாந்து பாதுகாப்பில் நிரந்தர பங்கு: டிரம்ப் கூற்று; ஒப்பந்தம் அடுத்த வாரம் எதிர்பார்ப்பு 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான் அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம் பழிவாங்க பொய்ப் புகார் அளித்த முதியவர் கைது: புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை துபாயில் தொழிலாளர் தங்குமிடங்களுக்கு குறைந்தபட்ச இட அளவு நிர்ணயம் தான்சானியாவின் புதிய பயணக் காப்பீட்டு விதிகள்: 44 டாலர் கட்டணம், அமல்படுத்தும் தேதி இல்லை சவுதி மரண தண்டனை விவகாரம்: அனோஜனின் குடும்பத்தை சந்தித்த ரிஷாத் பதியுதீன் திருகோணமலையில் மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவர் கைது ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படாது: பிரதமர் ஹரினி தேர்வில் ChatGPT பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை ஜெமினி ஏஐ சோதனையில் மூன்று நிறுவனங்களுக்குள் ஊடுருவல் மழைநீர் சேகரிப்பை நாடு முழுவதும் முன்னெடுக்க சங்கக்காரா அழைப்பு டெலிகிராம் குழு நிதி மோசடி: 38 வயது பெண் கைது இலங்கையின் தென்மேற்கில் செப்டம்பர் 19 முதல் மழை அதிகரிக்கும் ரஷ்ய எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி: டிரம்ப் சட்டத்தில் கையெழுத்து கிரீன்லாந்து பாதுகாப்பில் நிரந்தர பங்கு: டிரம்ப் கூற்று; ஒப்பந்தம் அடுத்த வாரம் எதிர்பார்ப்பு 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான் அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம் பழிவாங்க பொய்ப் புகார் அளித்த முதியவர் கைது: புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை துபாயில் தொழிலாளர் தங்குமிடங்களுக்கு குறைந்தபட்ச இட அளவு நிர்ணயம் தான்சானியாவின் புதிய பயணக் காப்பீட்டு விதிகள்: 44 டாலர் கட்டணம், அமல்படுத்தும் தேதி இல்லை சவுதி மரண தண்டனை விவகாரம்: அனோஜனின் குடும்பத்தை சந்தித்த ரிஷாத் பதியுதீன்
முகப்பு Article செய்தி
பேஸ்புக் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான முழுமையான வழிகாட்டி 2026
Article

பேஸ்புக் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான முழுமையான வழிகாட்டி 2026

📅 வெளியீடு: 17 Jul 2026 16:15 🔄 புதுப்பிப்பு: 17 Jul 2026 16:15 👤 Nerikkalam 👁 15 பார்வைகள்

Facebook Content Monetization மூலம் பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள் காணொளிகளைப் பதிவிடுவது மட்டுமல்லாமல் கணக்கின் அமைப்புகள் உள்ளடக்கத்தின் உரிமை பாதுகாப்பு வங்கி மற்றும் வரி விவரங்கள் போன்ற பல அம்சங்களையும் சரியாகப் பராமரிக்க வேண்டும்.

Meta நிறுவனம் தற்போது Facebook Content Monetization திட்டத்தை அழைப்பின் அடிப்படையில் வழங்கி வருகிறது. அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையான followers அல்லது views கிடைத்தவுடன் அனைவருக்கும் தானாக monetization கிடைக்கும் என்று கூற முடியாது. தகுதியான Page அல்லது Professional Mode profile களுக்கு Facebook அதிகாரப்பூர்வமாக அழைப்பு அனுப்பலாம்.

Facebook Page அல்லது Professional Mode தேவையா?

தனிப்பட்ட Facebook Profile மூலமாக வருமானம் பெற விரும்பினால் அந்த profile இல் Professional Mode செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். Professional Mode இல்லாத சாதாரண profile களுக்கு Professional Dashboard மற்றும் monetization கருவிகள் கிடைக்காது.

Facebook Page நடத்துபவர்களும் Meta Business Suite அல்லது Professional Dashboard வழியாக தங்கள் monetization தகுதியைச் சரிபார்க்கலாம்.

Professional Mode எவ்வாறு செயல்படுத்துவது ?

Facebook செயலியில் உங்கள் பிரதான Profile ஐ திறக்கவும்.

Profile படத்திற்குக் கீழே காணப்படும் மூன்று புள்ளிகளைத் தேர்வு செய்யவும்.

“Turn on professional mode” என்பதைத் தேர்வு செய்யவும்.

கொடுக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி Professional Mode-ஐ செயல்படுத்தவும். இந்த வசதி கிடைக்காதவர்கள் Facebook Page ஒன்றை உருவாக்கி அதன்மூலம் உள்ளடக்கங்களை வெளியிடலாம்.

Monetization தகுதியை எவ்வாறு சரிபார்ப்பது?

Professional Mode Profile பயன்படுத்துபவர்கள் >> Facebook ProfileProfessional Dashboard Monetization

Facebook Page பயன்படுத்துபவர்கள் >> Meta Business Suite Monetization

இந்தப் பகுதியில் கணக்கின் தற்போதைய நிலை கீழ்கண்ட வகைகளில் காட்டப்படலாம்:

Eligible
Not eligible
Invited
Under review
Policy issues
Restricted

Monetization பகுதியில் “Not eligible” என்று காட்டப்பட்டால் அதற்கான காரணத்தையும் Facebook பொதுவாகக் காட்டும்.

எந்த உள்ளடக்கங்களிலிருந்து பணம் கிடைக்கலாம்?

Facebook Content Monetization திட்டத்தின் கீழ் தகுதியான creators வெளியிடும் பின்வரும் public உள்ளடக்கங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வருமானம் கிடைக்கலாம்:

  • Reels
  • நீண்ட மற்றும் குறுகிய வீடியோக்கள்
  • Stories
  • புகைப்படப் பதிவுகள்
  • Text posts

வருமானம் அனைத்து பதிவுகளுக்கும் ஒரே அளவில் கிடைக்காது. Views watch time engagement பார்வையாளர்களின் நாடு விளம்பரத் தேவை மற்றும் உள்ளடக்கத்தின் தகுதி போன்ற காரணிகளால் வருமானம் மாறுபடலாம்.

Meta வெளியிட்டுள்ள தற்போதைய தகவலின்படி பணமாக்குதல் க்கு பரிசீலிக்கப்படும் Reels குறைந்தது 10 வினாடிகள் கதைகள் குறைந்தது 5 வினாடிகள் இருக்க வேண்டும். இது மட்டும் பணமாக்குதல் கிடைப்பதை உறுதிப்படுத்தாது.

கணக்கில் சரிசெய்ய வேண்டிய முக்கிய அமைப்புகள்
1. பதிவுகளை Public ஆக வெளியிடுங்கள்

Friends only அல்லது Private முறையில் பதிவிடப்படும் உள்ளடக்கங்கள் பொதுவான monetization வாய்ப்பைப் பெறாமல் போகலாம். Reels, வீடியோக்கள் மற்றும் பிற creator பதிவுகள் Public audience க்கு வெளியிடப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

2. உண்மையான பெயர் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்துங்கள்

Facebook கணக்கில் உள்ள பெயர் பிறந்த தேதி மற்றும் நாடு போன்ற தகவல்கள் பின்னர் வழங்கப்படும் வங்கி மற்றும் வரி ஆவணங்களுடன் பொருந்த வேண்டும்.

போலியான பெயர் மற்றொருவரின் அடையாளம் அல்லது தவறான பிறந்த தேதி பயன்படுத்தப்பட்டால் payout verification நேரத்தில் சிக்கல் ஏற்படலாம்.

3. மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை உறுதிப்படுத்துங்கள்

Facebook கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் தற்போது உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பழைய அல்லது பயன்படுத்த முடியாத தொலைபேசி எண்களை நீக்கிவிட்டு, செயல்பாட்டில் இருக்கும் எண்ணைச் சேர்க்க வேண்டும்.

4. Two-Factor Authentication செயல்படுத்துங்கள்

Settings & privacy → Settings → Password and security → Two-factor authentication

Authenticator application பயன்படுத்துவது SMS code-ஐ மட்டும் பயன்படுத்துவதைவிட கூடுதல் பாதுகாப்பை வழங்கும். கணக்கு hack செய்யப்பட்டால் சேகரிக்கப்பட்ட வருமானம் Page நிர்வாக அனுமதி மற்றும் payout விவரங்கள் ஆபத்துக்குள்ளாகலாம்.

5. தெரியாத சாதனங்களை நீக்குங்கள்

Password and security பகுதியில் “Where you’re logged in” என்பதைத் திறந்து தெரியாத தொலைபேசிகள் கணினிகள் மற்றும் browser session களிலிருந்து logout செய்ய வேண்டும்.

6. Page நிர்வாக அனுமதிகளைச் சரிபாருங்கள்

Facebook Page நடத்துபவர்கள் Page access பகுதியில் யாருக்கு Full control வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சரிபார்க்க வேண்டும். தேவையில்லாத நபர்களுக்கு Full control வழங்கக்கூடாது. வீடியோ upload செய்வதற்காக மற்றொருவருக்கு முழுமையான நிர்வாக அனுமதி வழங்குவது ஆபத்தானது.

அசல் உள்ளடக்கமே மிகவும் முக்கியம்

நீங்கள் நேரடியாக உருவாக்கிய வீடியோ, படம், குரல் பதிவு, செய்தி விளக்கம் அல்லது கல்வி உள்ளடக்கங்களைப் பதிவிடுவது பாதுகாப்பான நடைமுறையாகும்.

மற்றவர்களின் TikTok, YouTube, Instagram அல்லது தொலைக்காட்சி வீடியோக்களை download செய்து மீண்டும் Facebook இல் பதிவிடுவது monetization தகுதியைப் பாதிக்கலாம்.

வீடியோவை crop செய்தல், logo சேர்த்தல், வேகத்தை மாற்றுதல் அல்லது சிறிதளவு voice-over சேர்த்தல் மட்டும் அந்த வீடியோவை முழுமையாக உங்களுடைய அசல் படைப்பாக மாற்றாது.

Copyright பாதுகாப்புள்ள பாடல்கள் திரைப்படக் காட்சிகள் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொலைக்காட்சி செய்திக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவது copyright claim அல்லது monetization restriction ஏற்படுத்தலாம். Facebookன் Partner Monetization Policies மற்றும் Content Monetization Policies ஐ தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உள்ளடக்கங்கள்

பின்வரும் உள்ளடக்கங்கள் வருமானம் குறைக்கப்படுவதற்கோ monetization நீக்கப்படுவதற்கோ காரணமாகலாம்

  • அதிகப்படியான இரத்தம் அல்லது கொடூரமான காட்சிகள்
  • நிர்வாணம் அல்லது பாலியல் உள்ளடக்கம்
  • வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள்
  • வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் பதிவுகள்
  • தவறான அல்லது ஏமாற்றும் தகவல்கள்
  • Copyright மீறிய வீடியோக்கள் மற்றும் இசை
  • மற்றவர்களின் வீடியோக்களை மீண்டும் பதிவிடுதல்
  • Fake engagement பெறும் முயற்சிகள்
  • Followers, likes அல்லது views வாங்குதல்
  • ஒரே வீடியோவை மீண்டும் மீண்டும் பதிவிடுதல்
  • தொடர்பில்லாத தலைப்பு மற்றும் thumbnail பயன்படுத்துதல்
  • கிளிக் செய்வதற்காக தவறாக வழிநடத்தும் தலைப்புகள்

Facebook-ன் Community Standards-ஐ மீறும் எந்தப் பதிவும் monetization தகுதியை பாதிக்கலாம். ஒரு பதிவு நீக்கப்படாவிட்டாலும் அது விளம்பரங்களுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்பட்டு வருமானம் பெறத் தகுதியற்றதாக மாற்றப்படலாம்.

செய்தி Page நடத்துபவர்கள் கவனிக்க வேண்டியது

செய்தி வெளியிடும் Page அல்லது Profile நடத்துபவர்கள் இணையதளத்தில் காணப்படும் செய்தியை அப்படியே நகலெடுத்து பதிவிடாமல் சொந்த விளக்கம் குரல் பதிவு தொகுப்பு மற்றும் கூடுதல் தகவல்களுடன் வெளியிட வேண்டும்.

விபத்து போர் கொலை அல்லது மருத்துவ சம்பவங்கள் தொடர்பான காணொளிகளில் இரத்தம், சடலம் மற்றும் கடுமையான காயங்கள் தெளிவாகக் காட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

செய்தியின் தலைப்பு உண்மையான தகவலுடன் பொருந்த வேண்டும். பழைய சம்பவங்களை புதிய சம்பவம்போல் வெளியிடுதல் மாற்றியமைக்கப்பட்ட படங்களை உண்மையானவைபோல் காட்டுதல் மற்றும் ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுதல் கணக்கின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.

Views மற்றும் followers வாங்கக்கூடாது

Monetization பெறுவதற்காக followers, reactions, comments அல்லது video views வாங்குவது ஆபத்தான நடைமுறையாகும். இத்தகைய செயற்கையான engagement-ஐ Facebook கண்டறிந்தால் reach குறைக்கப்படுதல், monetization மறுக்கப்படுதல் அல்லது கணக்கு கட்டுப்படுத்தப்படுதல் போன்ற நடவடிக்கைகள் ஏற்படலாம்.

பரிசுப் போட்டிகளில் தேவையற்ற tagging, இந்தப் பதிவை 20 குழுக்களில் பகிருங்கள் போன்ற கட்டாய engagement நடைமுறைகளையும் தவிர்ப்பது நல்லது.

Account Status ஐ தொடர்ந்து பாருங்கள்

Facebook Profile அல்லது Page இல் >> Settings → Account Status

என்ற பகுதிக்குச் சென்று பின்வரும் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும்

  • Community Standards violations
  • Copyright violations
  • Recommendation restrictions
  • Monetization restrictions
  • Removed content
  • Page அல்லது Profile தொடர்பான கட்டுப்பாடுகள்

தவறாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீங்கள் கருதினால் கிடைக்கும் இடத்தில் Request Reviewஅல்லது Appeal என்பதைப் பயன்படுத்தலாம்.

எப்போது பணம் கிடைக்கும்?

Facebook வருமானம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச payout தொகையை அடைந்த பிறகே இணைக்கப்பட்ட வங்கி அல்லது PayPal கணக்கிற்கு அனுப்பப்படும்.

அமெரிக்காவிற்கு வெளியே வசிப்பவர்களுக்கு payout முறையைப் பொறுத்து குறைந்தபட்சத் தொகை மாறலாம். Meta வெளியிட்டுள்ள தகவலின்படி, local bank account அல்லது PayPal வழியாக பொதுவாக 25 அமெரிக்க டொலர் வரம்பும் wire transfer முறையில் 100 அமெரிக்க டொலர் வரம்பும் இருக்கலாம்.

நாடு currency மற்றும் payment method அடிப்படையில் இந்தத் தொகை மாறக்கூடும். உங்கள் Payouts பகுதியில் காட்டப்படும் தொகையே இறுதியானதாகக் கருதப்பட வேண்டும்.

Monetization அழைப்பை விரைவாகப் பெற என்ன செய்யலாம்?
  • தொடர்ச்சியாக அசல் உள்ளடக்கங்களை வெளியிடுங்கள்.
  • ஒரே துறையை மையமாகக் கொண்டு பதிவுகளை உருவாக்குங்கள்.
  • வீடியோவின் முதல் சில விநாடிகளில் முக்கியமான தகவலை வழங்குங்கள்.
  • தெளிவான குரல் மற்றும் நல்ல வெளிச்சம் பயன்படுத்துங்கள்.
  • மொபைல் திரைக்கு ஏற்ற செங்குத்தான Reels உருவாக்குங்கள்.
  • பார்வையாளர்களின் உண்மையான comments-க்கு பதிலளியுங்கள்.
  • Professional Dashboard Insights மூலம் எந்தப் பதிவுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பாருங்கள்.
  • Copyright இல்லாத அல்லது உரிமம் பெற்ற இசையை மட்டும் பயன்படுத்துங்கள்.
  • Facebook இல் நேரடியாக வீடியோவை upload செய்யுங்கள்.
  • Clickbait இல்லாத உண்மையான தலைப்புகளையும் thumbnails ஐயும் பயன்படுத்துங்கள்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
ஜினெடின் ஜிதான் பிரான்ஸ் தேசிய அணியின் தேர்வாளர் பணியில் கவனம் செலுத்தும் காட்சி
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான்
19 Sep 2026
பாரிஸ் நிர்வாக நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான செய்திப் படம்
அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம்
19 Sep 2026
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
French police seize 30 tonnes of nitrous oxide near Montauban
பிரான்ஸில் 30 டன் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல்
17 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கான வான்வழிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கு வலுப்படுத்தப்படும் வான்வழிப் பாதுகாப்பு
17 Sep 2026
நேட்டோ படைகளுக்கான HexaForce கட்டளை மென்பொருள் தொடர்பான ராணுவ தொழில்நுட்ப காட்சி
நேட்டோ படைகளுக்காக புதிய HexaForce கட்டளை மென்பொருளை அறிமுகப்படுத்திய தாலஸ்
17 Sep 2026
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
ரிமா ஹசன் காவல் விவகாரம்: தகவல் கசியவிடவில்லை என உள்துறை அமைச்சர் மறுப்பு
17 Sep 2026
இலங்கை செய்திகள்
திருகோணமலை மதுபானக் கடை கொள்ளை சம்பவத்தை விளக்கும் காட்சி
திருகோணமலையில் மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவர் கைது
19 Sep 2026
இலங்கை பள்ளி வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டைப் பயன்படுத்தும் மாணவர்கள்
ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படாது: பிரதமர் ஹரினி
19 Sep 2026
இலங்கையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிடும் குமார் சங்கக்காரா
மழைநீர் சேகரிப்பை நாடு முழுவதும் முன்னெடுக்க சங்கக்காரா அழைப்பு
19 Sep 2026
இலங்கையில் டெலிகிராம் ஆன்லைன் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்பான செய்தி
டெலிகிராம் குழு நிதி மோசடி: 38 வயது பெண் கைது
19 Sep 2026
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் காட்சி
இலங்கையின் தென்மேற்கில் செப்டம்பர் 19 முதல் மழை அதிகரிக்கும்
19 Sep 2026
Rishad Bathiudeen meeting the family of Anojan Sivarasa in Kalmunai
சவுதி மரண தண்டனை விவகாரம்: அனோஜனின் குடும்பத்தை சந்தித்த ரிஷாத் பதியுதீன்
18 Sep 2026
கணேமுல்லையில் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்ட 11 வயது சிறுவன் தொடர்பான பொலிஸ் விசாரணை
வைரலான போதைப்பொருள் வீடியோ: 11 வயது சிறுவன் பாதுகாப்புக் காவலில்
18 Sep 2026
Sri Lankan delegation heading to Qatar labour committee meeting
கத்தார் தொழிலாளர் குழுக் கூட்டத்துக்கு இலங்கை பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அருண் ஹேமச்சந்திர
18 Sep 2026
சினிமா செய்திகள்
மண்டாடி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் விளக்கம்
தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சைக்கு ‘மண்டாடி’ இயக்குநர் விளக்கம்
18 Sep 2026
பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட அறிமுக வீடியோ காட்சி
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது
18 Sep 2026
Marshals Season 2 தொடரில் ஜெஃபர்சன் வைட் மீண்டும் நடிப்பு
‘யெல்லோஸ்டோன்’ கதாபாத்திரமாக ‘மார்ஷல்ஸ்’ 2-ஆம் சீசனில் மீண்டும் ஜெஃபர்சன் வைட்
17 Sep 2026
David Reddy படத்தில் கமலா ரெட்டி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்
‘டேவிட் ரெட்டி’ படத்தில் ஆக்ரோஷமான வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
17 Sep 2026
‘மகாராஜா’ திரைப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் குறித்த செய்தி
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘மகாராஜா’; மேத்யூ மெக்கோனஹி நடிக்கத் திட்டம்
17 Sep 2026
கஜகஸ்தானில் நடைபெற்ற Astana AI Film Festival செயற்கை நுண்ணறிவு திரைப்படப் போட்டி
கஜகஸ்தானில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு திரைப்படப் போட்டி
17 Sep 2026
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 20-வது திருமண நாள் கொண்டாட்டம்
சூர்யா–ஜோதிகாவின் 20-வது திருமண நாள்: கொண்டாட்டப் புகைப்படங்கள் பகிர்வு
16 Sep 2026
தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான திரையுலக செய்திகள்
ரஜினி பாராட்டில் சூரி மகிழ்ச்சி; த்ரிஷாவுக்கு அம்பிகா அறிவுரை
15 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading