படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் அறிவித்துள்ளது. தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
‘பாக்கெட் நாவல்’ படக்குழு
விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ் பி ஷெட்டி இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
முதலில் இளையராஜா இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இசைப் பணிகளில் இருந்து விலகினார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், சத்தியராஜ் நடராஜன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே இப்படத்தைத் தயாரித்துள்ளார். Pocket Novel Pongal Release ஆகும் இந்தப் படம், பொங்கல் வெளியீடுகளில் ஒன்றாக திரையரங்குகளைச் சந்திக்கிறது.

































