சென்னையில் தொடங்கிய ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ஷாலினி அஜித்குமார் கிளாப் அடித்து முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார். படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இசையை அனிருத் அமைக்கிறார்.
நடிகர்கள் ரா.பார்த்திபன், உன்னி முகுந்தன், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். Ajith Daredevil film படப்பிடிப்பு ஹைதராபாத், மலேசியா, பாங்காங் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. அஜித்குமார் நவம்பர் 12-ம் தேதி படக்குழுவுடன் இணைய உள்ளார்.





























