பாஸ்டில்–கான்கோர்ட் பாதைக்கு தடை
CGT சார்பில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் பேரணி பாதையை முன்மொழிந்திருந்தது. நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட காவல்துறை உத்தரவின்படி, நவம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை, புல்வார் வோல்டேர் வழியாக குடியரசு சதுக்கம் மற்றும் நேஷன் சதுக்கம் இடையே போராட்டம் நடத்தலாம்.
ஆனால், இந்த புதிய Paris protest route-ஐ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்கவில்லை. தொடக்கத்தில் கோரிய பாஸ்டில்–கான்கோர்ட் பாதையில் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, நிர்வாக நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. நாடாளுமன்றம், எலிசே மாளிகை, மாட்டின்யோ ஆகிய இடங்களுக்கு அருகே செல்லும் வகையில் ஆரம்பப் பாதை அமைந்திருந்தது.
இந்தப் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் நடைபெறவுள்ள பேரணிகளில் பாரிஸ் நகரப் பகுதியைத் தவிர்த்து 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. பொதுஒழுங்கு பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.






























