காலை 6 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை காட்சிகள்
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு, காலை 6 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் திரையிடலாம். இதற்காக தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோஷியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அவற்றில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘சி’ படிவ உரிம நிபந்தனை 14-ஏ-இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தற்போது தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. மேலும், புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு வெளியான நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகளும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. புதிய உத்தரவின் மூலம் six shows for new Tamil films நடைமுறைக்கு வருகிறது.





























