ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் தோற்றத்தில், வானில் இருந்து இறங்கும் பறக்கும் தட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிவா இடம்பெற்றுள்ளார். படத்தின் தலைப்புக்கு கீழ் ‘ஏலியன் அத்தியாயம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிவாவுக்கு வழங்கப்பட்டிருந்த ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்குப் பதிலாக ‘விண்வெளி மண்டல சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் இடம்பெற்றுள்ளது.
விண்வெளி பின்னணியில் புதிய பகடி
ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. 2010ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப் படம்’ மூலம் சி.எஸ்.அமுதன் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான பாணிகளும், நடிகர்களின் செய்கைகளும் பகடி செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு ‘தமிழ்ப் படம் 2’ வெளியானது. அந்தப் படத்தில் ஹாலிவுட் தொடர்களும், தமிழ் சினிமாவின் காவல் கதாபாத்திரங்களும் பகடி செய்யப்பட்டிருந்தன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி, இம்முறை பால்வெளி மற்றும் ஏலியன் பின்னணியை மையமாகக் கொண்டு பகடி செய்யக்கூடும் என்பதை முதல் தோற்றம் சுட்டிக்காட்டுகிறது. Tamizh Padam 3 shooting தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






























