அர்ஜுன் தாஸுடன் நடித்த அனுபவம்
விழாவில் பேசிய சஞ்சனா நடராஜன், அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது என்று தெரிவித்தார். இருவரும் படத்தில் காவல் அதிகாரிகளாக நடித்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக அவர் கூறினார்.
படப்பிடிப்புத் தளத்தில் அர்ஜுன் தாஸ் கலகலப்பாக இருப்பார் என்றும், அவருடன் சீரியஸ் காட்சிகளில் நடிப்பது சில நேரங்களில் சவாலாக இருக்கும் என்றும் சஞ்சனா தெரிவித்தார். அவருடன் மீண்டும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
இந்தப் படத்துக்காக சுமார் 35 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியதாகவும், இதுவரை இணைந்த குழுக்களில் மிகவும் திட்டமிட்டு நேரத்தை வீணாக்காமல் திறமையாக செயல்பட்ட குழு இதுவே என்றும் அவர் குறிப்பிட்டார். படக்குழுவில் அதிகமான பெண்கள் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.
சென்டிமென்ட் கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள John Doe Tamil movie ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும் என சஞ்சனா நம்பிக்கை தெரிவித்துள்ளார். படத்துக்கு ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி தயாரித்துள்ளனர்.





























