ஜெர்மனி விசா வகைகள், கல்வி குடும்ப இணைவு அல்லது நீண்டகால குடியேற்றம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக செல்ல விரும்புபவர்கள் தங்களது பயண நோக்கத்திற்கு ஏற்ப சரியான விசாவை விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனிக்கான விசா தேவைகள் விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தகுதிகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவாக 90 நாட்கள் வரை தங்கும் சுற்றுலா வணிகம் அல்லது குடும்ப வருகைகளுக்காக Schengen Visa வழங்கப்படுகிறது.
அதற்கு மேல் தங்கவோ அல்லது வேலை செய்யவோ விரும்புபவர்கள் National Visa பெற்று பின்னர் ஜெர்மனியில் குடியிருப்பு அனுமதி (Residence Permit) பெற வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டெய்ன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் குடிமக்களுக்கு ஜெர்மனிக்குள் நுழைய விசா தேவையில்லை. மேலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் குடிமக்கள் 90 நாட்கள் வரை விசா இன்றி நுழைய முடியும். ஆனால் நீண்டகால தங்கல் அல்லது வேலைக்காக தனியான நீண்டகால விசா அவசியமாகும்.
ஜெர்மனியில் தற்போது முக்கியமாக பயன்படுத்தப்படும் விசா வகைகளில்
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042
- Schengen Visa (குறுகியகால பயணம்)
- Student Visa (கல்வி)
- Work Visa / Skilled Worker Visa (வேலை)
- EU Blue Card (உயர் திறன் பணியாளர்கள்)
- Family Reunification Visa (குடும்ப இணைவு)
- Opportunity Card (Chancenkarte)
- Job Seeker Visa
- Digital Nomad உள்ளிட்ட சிறப்பு விசாக்கள் அடங்கும்.
விசா விண்ணப்பிக்கும் போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு பயணத்தின் நோக்கத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் தங்கும் செலவுகளை ஏற்கும் நிதி ஆதாரம் மருத்துவ காப்பீடு மற்றும் தேவையான பிற ஆவணங்கள் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டிலும் ஜெர்மனி திறமையான வெளிநாட்டு பணியாளர்களை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில் EU Blue Card Opportunity Card உள்ளிட்ட பல குடியேற்ற பாதைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.













Leave a Reply