நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை பிரபல தமிழ் ராப் பாடகர் யோகி பி, நடிகை அதிதி சங்கர் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை எம்கே பாலாஜி எழுதியுள்ளார்.
வேகமான ராப் இசையுடன் இணையும் கிராமிய தாலாட்டு
யோகி பி-யின் வேகமான ராப் உச்சரிப்புடன் பாடல் தொடங்குகிறது. இரண்டாவது நிமிடத்தை நெருங்கும் போது, வேகமான இசைக்கு இடையே அதிதி சங்கரின் குரலில் ஒலிக்கும் கிராமிய தாலாட்டு இடம்பெறுகிறது. இந்த மாற்றம் பாடலின் ரசனையை பாதிக்காமல், அதற்கு இதமான தன்மையைச் சேர்க்கிறது.
அதிதி சங்கர் இதற்கு முன்பு நிவாஸ் கே பிரசன்னாவின் தனி இசைப் பாடலான ‘இருவரில்’ பாடியிருந்தார். Makkal Kaavalan first single உருவாக்கத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிர்லா ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
































