‘ஆர்எக்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை ஹரிஹரன் ராஜுவுடையது. ஆஷாமீரா ஐயப்பன் வசனம் எழுதியுள்ளார்.
‘ஆர்எக்ஸ்’ படக்குழுவினர்
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
Regina Cassandra RX movie குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது படத்தின் தலைப்புடன் வெளியான முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.





























