வறட்சியால் பிரான்சில் விவசாயச் செலவுகள் உயர்வு
பிரான்சில் இதுவரை பதிவான மிகச் சூடான கோடைக்காலத்துக்குப் பிறகு, வெப்ப அலைகள் மற்றும் வறட்சி விவசாயத்தை கடுமையாகப் பாதித்துள்ளன. இதனால் சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த கோடைக்கால சராசரியுடன் ஒப்பிடுகையில், கொத்துத் தக்காளியின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பருவத் தொடக்கத்தில் லீக்ஸ் மற்றும் லெட்டுஸ் விலைகள் 2021 முதல் 2025 வரையிலான காலகட்ட சராசரியை விட 50 சதவீதம் அதிகமாக இருந்தன.
பிரான்சில் ஆகஸ்ட் மாதத்தில் வறட்சியால் காய்கறி உற்பத்திச் செலவு 14 சதவீதம் உயர்ந்தது. கூடுதல் நீர்ப்பாசனச் செலவுகள் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் வெள்ளம் ஆகியவை விவசாய விளைச்சலைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட 10 சதவீத மக்கள் தங்கள் வருமானத்தில் 77 சதவீதத்தை உணவுக்காக செலவிடுகின்றனர். எனவே, ஒவ்வொரு விலை உயர்வும் அவர்களுக்கு கடினமான செலவுத் தேர்வுகளை ஏற்படுத்தும் என அறிக்கை கூறுகிறது. Climate food inflation தாக்கத்தை குறைக்க, குறைந்த நீர் தேவைப்படும் பயிர்கள், வேளாண் சூழலியல் முறைகள், சிறு பண்ணைகளுக்கான ஆதரவு மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மீதான சார்பைக் குறைக்கும் கொள்கைகளை ஆக்ஸ்ஃபாம் வலியுறுத்தியுள்ளது.






























