நெல்லையப்பர் கோயிலில் தரிசனம்
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரோஜா, தனது கணவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி மற்றும் குடும்பத்தினருடன் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில், உச்சிஷ்ட கணபதி கோயிலில் தரிசனம் செய்தார்.
நெல்லையப்பர் கோயிலைச் சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள இசைத் தூணை கையால் இசைத்துப் பார்த்தார். அப்போது பக்தர்கள் அவருடன் ஆர்வமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தரிசனம் முடித்து வெளியே வந்த ரோஜாவிடம், சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “மக்களுக்குப் பிடித்த நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயமாக திரைப்படங்களில் நடிப்பேன்” என்று அவர் பதிலளித்தார். இதுவே அவரது Roja film acting statement ஆக அமைந்தது.
தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக அரசு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்தார். “நோ பாலிடிக்ஸ்” என்று சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.




























