தென்காசி மாவட்டம் அரியப்பபரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (68), பாவூர்சத்திரம் அருகே குருசாமிபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிலிருந்து அரியப்புரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவரது கையில் இருந்த பை தவறி விழுந்தது. அதில் 30 சவரன் நகைகள் மற்றும் ரூ.5,000 ரொக்கம் இருந்தது.
காவல் நிலையத்தில் ஒப்படைத்த நகைப் பை
பையைத் தேடி கிடைக்காமல் சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அதற்கு முன்னதாக, குருசாமிபுரம் அருகே மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாப்பையா, ஆரியங்காவூர் வழியாக சைக்கிளில் சென்றபோது சாலையில் கிடந்த அந்தப் பையை கண்டெடுத்தார்.
நகைகளும் பணமும் இருப்பதை அறிந்த அவர், தனது மகனை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் வேல்கனியிடம் நடந்ததை விளக்கி பையை ஒப்படைத்தார்.
சுப்பிரமணியன் நகைப் பையின் அடையாளங்கள், நகைகளின் எடை மற்றும் பணம் குறித்த விவரங்களைச் சரியாக தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் பொருட்களை அவரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். Tenkasi lost gold bag சம்பவத்தில் பாப்பையாவின் நேர்மை குறித்து அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, அவரை நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




























