ஜேசனின் பாஸ் தியாகம்
கொலைகள் தொடர்பான டாஸ்க்கில் அஷ்மிதாவுக்கு ஜேசன் திறமையான கூட்டாளியாக இருந்தார். சந்தேகம் பிருத்வி மீது திரும்பும் வகையில் அவர் செய்த முயற்சியும் கவனிக்கப்பட்டது. பின்னர், தன்னிடம் இருந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை அவினாஷுக்காக பயன்படுத்தாமல் தியாகம் செய்ய ஜேசன் முடிவு செய்தார். இதனால் அவினாஷ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். இந்த முடிவு உண்மையான தியாகமா அல்லது ஜேசனின் உத்திதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அக்ஷிதா, அவினாஷின் கோபத்தைத் தடுக்க முயன்றதுடன், சில மோதல்களிலும் ஈடுபட்டார். ஆனால் நிகழ்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கிடையில், வினோத் மற்றும் அன்சரின் நகைச்சுவை நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாரசியப்படுத்தியது. ‘திருந்துங்கடா’ டாஸ்க்கில் இருவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
ஷாப்பிங் டாஸ்க்கில் முனியம்மாளின் தவறுகளும், கொலைகள் தொடர்பான அவரது கூர்மையான சந்தேகங்களும் நகைச்சுவையை ஏற்படுத்தின. இந்த வார Bigg Boss 10 Tamil நிகழ்ச்சியில் பிக் பாஸின் குரல் இல்லாத வீடு என்ற புதிய சூழலும் இடம்பெற்றுள்ளது. வினோத்துக்கு ‘சின்ன பிக் பாஸ்’ போல அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

































