நியூயார்க்கில் நடைபெறும் 54-வது விழா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவம்பர் 23-ஆம் தேதி 54-வது சர்வதேச எம்மி விருது விழா நடைபெற உள்ளது. இதில் விஜய் சேதுபதி பங்கேற்று விருது வழங்க உள்ளார். சர்வதேச தொலைக்காட்சித் துறையில் முக்கியத்துவம் பெற்ற இந்த நிகழ்வில் அவருடைய பங்கேற்பு, இந்தியத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி விழாவில் இடம்பெறுவதற்கு, சர்வதேச எம்மி விருதுகளை வழங்கும் இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பின் வாரிய உறுப்பினர் கவிதா குப்தா முக்கியப் பங்காற்றியுள்ளார். Vijay Sethupathi International Emmy பங்கேற்பு குறித்து இந்தத் தகவல் அவரது சர்வதேச அங்கீகாரத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
































