தனிநபரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை
மலர்விழி நடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, அவரும் ஷிவானி சுப்ரமணியும் இணைந்து தயாரித்துள்ளனர். சந்தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு செய்துள்ளார். Signal at 11.30 trailer launch நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் விதார்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மலர்விழி நடேசன் பேசும்போது, ஒரு தனிநபரின் வாழ்க்கையில் இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் பிரச்சினையே படத்தின் கதை என்று தெரிவித்தார். அனைவரும் சந்தித்திருக்கக்கூடிய சம்பவம் என்பதால் பார்வையாளர்கள் கதையுடன் ஒன்ற முடியும் என்றும், படத்துக்கு இமானின் இசை பெரிய பலம் என்றும் அவர் கூறினார். சந்தோஷ், பூஜிதா, பவ்யா உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

































