5G கொள்கையில் மலேசியாவின் அனுபவம்
தொலைத்தொடர்பு கொள்கைகளில் “தொழில்நுட்ப காலனித்துவம்” உருவாகக் கூடாது என ஃபஹ்மி எச்சரித்தார். மலேசியா முதலில் ஒரே மொத்த வலையமைப்பு முறையில் 5G சேவையை அறிமுகப்படுத்தியது. அந்த அணுகுமுறைக்கு GSMA Intelligence எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதிலும், மலேசியா அதனைத் தேர்வு செய்ததாக அவர் குறிப்பிட்டார். பின்னர் அந்த அமைப்பு இரட்டை வலையமைப்பு முறையாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் தூதரக உணர்வுகள் மற்றும் உள்நாட்டு முன்னுரிமைகளை சமநிலைப்படுத்த வேண்டிய சவாலான பணியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பலதுருவ உலகச் சூழலில், நாடுகள் பிரிவினைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார். வெவ்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்புகள் ஒன்றுடன் ஒன்று செயல்பட உதவும் interoperability கொள்கை முக்கிய சோதனைகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். ASEAN அமைப்பின் ஒருமித்த முடிவு அணுகுமுறையிலும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பு அளிக்கப்படுவதாகக் கூறினார்.
வளர்ந்து வரும் நாடுகளின் டிஜிட்டல் இடைவெளியை குறைக்க உதவ வேண்டும் என்றும், 6G குறித்து பேசுவதற்கு முன் 5G மற்றும் 5G-Advanced பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் ஃபஹ்மி வலியுறுத்தினார். digital sovereignty தொடர்பான விவாதங்கள் தொழில்நுட்ப தன்னிறைவைத் தாண்டி விரிவான தேசிய இறையாண்மையையும் உள்ளடக்க வேண்டும் என்றார்.

































