அஞ்சல்துறையின் விளக்கம்
அக்டோபர் 25ஆம் தேதி தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவரிடம் விளக்கம் கோரி கடிதம் எழுதியதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அஞ்சல் குறியீடுகளில் சர்வதேச அரபு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது அஞ்சல்துறை விதிகளுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அக்டோபர் 28ஆம் தேதி பதில் அனுப்பியுள்ளார். 16.10.2026 தேதியிட்ட கடிதத்தை இந்தி மொழியில் மொழிபெயர்க்கும்போது, அனுப்புநர் முகவரியில் இருந்த PIN Code தவறுதலாக தேவநாகரி எண்களில் அச்சிடப்பட்டதாக அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அஞ்சல்துறைத் தலைவர் உறுதியளித்துள்ளார். மேலும், கடிதத் தலைப்பில் இருந்த இந்தி அஞ்சல் எண்கள் நீக்கப்பட்டதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Devanagari numbers in PIN code பயன்படுத்தப்பட்டதை அஞ்சல்துறை தவறாக ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இந்தியை மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்கும் முயற்சிகளை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.




























