இந்த மாற்றம் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் General Safety Regulation (GSR 2) திட்டத்தின் அடுத்த கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது கார்களில் இந்த வசதிகளை பின்னர் பொருத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
புதிய வாகனங்களில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்களில் பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி பயணிகளையும் கண்டறியும் மேம்பட்ட தானியங்கி அவசர பிரேக்கிங் (Advanced Emergency Braking), ஓட்டுநரின் கவனச்சிதறலை கண்டறியும் அமைப்பு (Driver Distraction Warning), முன்புற பார்வையை மேம்படுத்தும் தொழில்நுட்பம், தேய்ந்த டயர்களுக்கான புதிய பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு கண்ணாடி (Safety Glass) ஆகியவை அடங்கும். சில பழைய மாடல்கள் இந்த தொழில்நுட்பங்களை பொருத்த முடியாததால் அவற்றின் விற்பனை நிறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
இந்த பிரான்சில் புதிய கார் விதிமுறை பாதுகாப்பு அம்சங்கள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 2050 ஆம் ஆண்டுக்குள் மிகக் குறைந்த அளவுக்கு கொண்டுவரும் “Vision Zero” இலக்கை அடைய உதவும் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.




























