பிரான்சில் இந்த கோடைக்காலத்தில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் கடும் வெப்பநிலைக்கு மத்தியில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேலும் ஒரு புதிய வெப்ப அலை (Canicule) உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்கனவே பல வெப்ப அலைகளை சந்தித்துள்ள பிரான்ஸ் தற்போது நான்காவது கடும் வெப்ப அலைக்குள் இருப்பதாகவும் அதன் பின்னர் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக நீடிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரான்சில் இந்த கோடைக்காலத்தில் தற்போதைய கணிப்புகளின்படி நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை மீண்டும் 35°C முதல் 40°C வரை உயரக்கூடும். எனினும் அடுத்த சில நாட்களில் வெளியாகும் புதிய வானிலை தரவுகளின் அடிப்படையில் இதன் தீவிரம் மற்றும் எந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என்பது தெளிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளை தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.













Leave a Reply