மகாவலி ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை
குறித்த பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆற்றுக்கு அருகில் வசிப்போர் தங்களையும் தங்களுடைய சொத்துகளையும் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது. Mahaweli River flood warning ஞாயிற்றுக்கிழமை (20) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இது திங்கட்கிழமை (21) காலை 10.30 மணி வரை அமலில் இருக்கும்.






























