உசிலம்பட்டியைத் தேர்வு செய்யும் பின்னணி
உசிலம்பட்டி பகுதியில் பெண்களுக்கு சீர் வழங்கும் கலாசாரம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றும் சில குடும்பங்கள் கடன் பெற்றாவது மகள்களுக்கு சீர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் பெண்களை மையப்படுத்திய இந்தத் திட்டத்தை உசிலம்பட்டியில் இருந்து தொடங்கலாம் என தவெக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டி பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த பகுதிகளில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. எனவே, திட்டத் தொடக்க நிகழ்வில் பெண் சிசுக் கொலை தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை முன்வைத்தால் வரவேற்பு கிடைக்கும் என தவெக தலைமை கணக்கிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Thaimaaman Thanga Motiram scheme நிகழ்வை உசிலம்பட்டியில் எந்த இடத்தில் நடத்தலாம் என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்வர் விஜய் நேரில் பங்கேற்பாரா அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திட்டத்தைத் தொடங்கி வைப்பாரா என்பதும் ஆலோசனையில் உள்ளது.






























