ஆறு போர் துறைகளை இணைக்கும் HexaForce
செப்டம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட HexaForce, தரைப் போர், கடற்போர், விண்வெளி, சைபர் துறை, மின்னணுப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய ஆறு துறைகளை மையமாகக் கொண்டது. இது அமெரிக்காவின் Palantir அமைப்புக்கு ஐரோப்பிய மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளதாக தாலஸ் தெரிவித்துள்ளது.
தாலஸின் செயற்கை நுண்ணறிவு பிரிவான cortAIx-ன் 800 பொறியாளர்களின் ஆதரவுடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தினமும் 1,000 இலக்குகளை பகுப்பாய்வு செய்ய HexaForce military command software உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில், பல்வேறு உணரிகளிலிருந்து கிடைக்கும் உளவுத் தரவுகளை இணைக்க அமெரிக்காவின் Maven Smart System மென்பொருளை நேட்டோ தேர்வு செய்தது. முக்கியமான ராணுவத் தரவுகளைப் பயன்படுத்த வெளிநாட்டு நிறுவனத்தை சார்ந்திருப்பது ஐரோப்பிய நாடுகளின் இறையாண்மை தொடர்பில் கவலைகளை ஏற்படுத்துகிறது.
நேட்டோவுக்கு இதுபோன்ற தீர்வுகள் தொடர்பாக பல கொள்முதல் அழைப்புகள் தற்போது நடைபெறுகின்றன என்று தாலஸ் தலைமை நிர்வாக அதிகாரி Patrice Caine தெரிவித்தார். இந்த துறை இன்னும் தொடக்க நிலையில் இருப்பதாகவும், போட்டி இப்போதுதான் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். HexaForce military command software உட்பட பல்வேறு தீர்வுகள் இந்தப் போட்டியில் இடம்பெறுகின்றன.































