பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மாக்ரோன் வரும் அடுத்த கல்வியாண்டு முதல் நாட்டின் உயர் பள்ளிகளான lycées-களில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பள்ளிகளில் மாணவர்களின் கவனம் குறைவது டிஜிட்டல் அடிமை பிரச்சினைகள் அதிகரித்தல் மற்றும் பாடசாலை சூழலில் சமூக தொடர்பு குறைவது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 2018 முதல் பிரான்சின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொபைல் போன்கள் தடைசெய்யப்பட்டு வந்தாலும், இது முதல் முறையாக உயர்நிலைப் பள்ளிகளுக்கும் முழுமையான தடையை அமல்படுத்தும் முயற்சியாகும்.
தற்போது கல்வித்துறை இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது. பல நாடுகளில் மாணவர்களின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில் பிரான்சின் புதிய தீர்மானம் உலகளாவிய கல்வி மாற்றங்களில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





Leave a Reply