அதன்படி விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயதை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். மேலும் சட்டபூர்வமாக அயர்லாந்தில் வசித்திருக்க வேண்டும். பொதுவாக கடந்த 9 ஆண்டுகளில் குறைந்தது 5 ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படும் சட்டபூர்வ வசிப்புக் காலம் இருக்க வேண்டும். அதில் விண்ணப்பிக்கும் நாளுக்கு முந்தைய ஒரு ஆண்டு இடையறாத சட்டபூர்வ வசிப்பாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நல்ல நடத்தை கொண்டவராக இருக்க வேண்டும். குற்றப் பதிவுகள் அல்லது கடுமையான சட்ட மீறல்கள் இருப்பின் விண்ணப்பம் பாதிக்கப்படலாம். அதேபோல் குடியுரிமை பெற்ற பிறகும் அயர்லாந்திலேயே தொடர்ந்து வாழும் நோக்கம் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் அயர்லாந்து குடியுரிமைக்கு வழங்கப்பட்டால் அதிகாரப்பூர்வ குடியுரிமை விழாவில் பங்கேற்று நாட்டிற்கு விசுவாச உறுதிமொழி எடுக்க வேண்டும். இது குடியுரிமை பெறும் இறுதி கட்டங்களில் ஒன்றாகும்.
அயர்லாந்து அரசின் தகவலின்படி குடியுரிமைக்கான தகுதிகளை பூர்த்தி செய்வது மட்டுமே குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்யாது. ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு சட்டப்படி இறுதி முடிவு எடுக்கப்படும்.





























