பொலிஸாரின் தகவலின்படி, அவர் தனது காதலனுடன் நவம்பர் 7ஆம் தேதி அந்தத் தங்குமிடத்துக்கு வந்துள்ளார். தேவையான கட்டணத்தை செலுத்தி அறையைப் பதிவு செய்திருந்தனர்.
காணாமற்போன காதலனைத் தேடும் நடவடிக்கை
செவ்வாய்க்கிழமை (10) காலை தங்குமிட உரிமையாளர், அறைக்குள் பெண் ஒருவர் காயங்களுடன் கிடப்பதைக் கவனித்து உடனடியாக நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பின்னர் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
நுவரெலியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் உயிரிழந்த பெண்ணின் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா நீதவானின் சம்பவ இடப் பரிசோதனைக்குப் பின்னர், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. Nuwara Eliya hotel death தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.






























