2025ஆம் ஆண்டில் 25 கொலைகளும், 27 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் நடைபெறும் தொடர் கொலைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள் குறித்து திமுக குற்றச்சாட்டு
இளைஞர்களைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அது கொலைகள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதாகவும் சிவா குற்றம்சாட்டியுள்ளார். தெருவுக்குத் தெரு செயல்படும் ரெஸ்டோ பார்களில் இடம்பெறும் கவர்ச்சி நடனங்களால் கலாசாரம் சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறையின் தோல்வியும், காவல்துறையின் செயல்பாடற்ற தன்மையும் குற்றவாளிகள் துணிச்சலுடன் நடமாடுவதற்கு காரணமாக இருப்பதாக திமுக அமைப்பாளர் கூறியுள்ளார். காவல்துறை மக்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படாமல், அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கில் புதுச்சேரி இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்த கருத்து மக்களை ஏமாற்றும் செயல் என சிவா கூறியுள்ளார். Puducherry crime நிலவரத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்கவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.





























