பிரான்ஸில் 15 வயதிற்குக் கீழான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக உள்ளது என்று செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அன்னே லெ ஹெனாப் (Anne Le Hénanff) அறிவித்துள்ளார்.
Le Parisien இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்த சட்டம் குழந்தைகளின் மனநலம் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கையாக கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் இந்த முயற்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
இந்த மசோதாவில் 15 வயதிற்குக் கீழானவர்களுக்கு சமூக வலைதள அணுகலைத் தடை செய்வதுடன் உயர்நிலைப் பள்ளிகளில் (High Schools) மொபைல் போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் பிரிவு சேர்க்கப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA) உட்பட ஐரோப்பிய சட்டங்களுக்கு இணங்கும் வகையில் குறுகிய மற்றும் வலுவான சட்டமாக இதை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் வயது சரிபார்ப்பை முறையாக கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
2023 ஜூலை மாதத்தில் 15 வயதை “டிஜிட்டல் மேஜாரிட்டி” என அறிவிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் ஐரோப்பிய மட்டத்தில் ஏற்பட்ட தடையால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இருப்பினும், குழந்தைகளின் மனநலத்தை பாதுகாப்பது ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்சினை என்பதால், 2026 முதல் காலாண்டின் முடிவுக்குள் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply