
இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்திய அதிகாரிகள், கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், இதற்காக ஹோட்டல் நிர்வாகங்கள் மீது அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் தங்கள் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடும் வகையில் நல்ல சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முடிவு குவைத் நாட்டின் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.































