2024ஆம் ஆண்டு சம்பவம் என காவல்துறை விளக்கம்
வீடியோவில் இருப்பவர், தாளவாடி காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மாது என்கிற மகாதேவா (19) என காவல்துறை தெரிவித்துள்ளது. கொள்ளை வழக்குகள் தொடர்பாக அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், 2024 செப்டம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை, சில ஊடகங்களும் சமூக வலைதளப் பதிவுகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக வெளியிட்டு வருவதாக காவல்துறை கூறியுள்ளது. தற்போது இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Thalavadi police assault video தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையங்களில் நடைபெறும் கொடூரத் தாக்குதல்களுக்கு பணியிட மாற்றம் அல்லது இடைநீக்கம் மட்டுமே போதாது என்றும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடியாக குற்றவியல் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.





























