அவிக்லியின் முக்கியக் கூறு இன்சுலின் ஐகோடெக் ஆகும். இது பெரியவர்களுக்கான டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. டைப்-1 நோயாளிகள் உணவு நேரத்தில் செலுத்தப்படும் குறுகியகால இன்சுலினுடன் இதை இணைக்க வேண்டும். டைப்-2 நோயாளிகளுக்கு தனியாகவோ அல்லது பிற நீரிழிவு மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தலாம்.
Weekly insulin injection முறையின் செயல்பாடு மற்றும் எச்சரிக்கைகள்
இன்சுலின் ஐகோடெக், ரத்தத்தில் உள்ள சீரம் அல்புமினுடன் பிணைந்து மெதுவாக வெளியாகும் மிக நீண்டகால அடிப்படை இன்சுலின் வகையாகும். இதனால் ஏழு நாட்களுக்கும் ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தும் விளைவு கிடைக்கிறது. ஆண்டுக்கு செலுத்தப்படும் அடிப்படை இன்சுலின் அளவு, தினசரி 365 டோஸ்களிலிருந்து 52 டோஸ்களாக குறையலாம்.
அவிக்லி ஃப்ளக்ஸ் டச் பேனா மூலம், ஒவ்வொரு வாரமும் ஒரே நாளில் தோலடியாக ஊசி செலுத்த வேண்டும். இந்திய நோயாளிகள் பங்கேற்ற ONWARDS ஆய்வுகளில், HbA1c குறைப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு தினசரி அடிப்படை இன்சுலின்களுடன் பொதுவாக ஒத்திருந்தது.
ஆனால், குறைந்த ரத்தச் சர்க்கரை, ஊசி செலுத்திய இடத்தில் எதிர்வினை மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக டைப்-1 நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி, ரத்தச் சர்க்கரை பரிசோதனை மற்றும் மருத்துவர் கூறும் அளவு மாற்றங்களை முறையாகப் பின்பற்றுவது அவசியம்.





























