குவைத் – ரமலான் மாதத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிச்சை எடுக்கும் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் சேவை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மார்க்கெட்டுகள் மற்றும் பள்ளிவாசல்களின் அருகே சிலர் ரமலானின் ஆன்மீக சூழலை பயன்படுத்தி பிச்சை எடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிச்சை எடுக்கும் நபர்களையும் அதன்மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிய சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் […]
