தூதரகப் பிரிவுகளின் டிஜிட்டல் மாற்றம் குறித்து ஆலோசனை
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் அனுசரணையில், டிஜிட்டல் மாற்றக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தூதரகப் பிரிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், அரச நிறுவனங்களை தூதரக அமைப்புடன் ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த Sri Lanka consular digital transformation நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவும் வெளிநாட்டு தூதரகப் பிரிவுகளும் ஒருங்கிணைந்த முறையில் மாற்றப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பணிப்பாளர் நாயகம் கே. கே. டி. குமாரசிறி, முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுதந்த கணேகமஆரச்சி, டிஜிட்டல் விவகார அமைச்சின் ஆலோசகர் டாக்டர் மனோஜ் கமகே, GovTech Sri Lanka நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பிரிவு தலைவர் மைக்கேல் ஹெல்ம் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.





























