Haute-Corse மாவட்டத்தின் கிழக்குக் கரைக்கு அதிக பாதிப்பு
வானிலை முன்னறிவிப்பின்படி, செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை இரவு முதல் செப்டம்பர் 12 சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை ஆபத்து அதிகமாக இருக்கும். அந்த நேரத்துக்குப் பிறகு எச்சரிக்கை நீக்கப்படும். இதையடுத்து பிரான்ஸ் முழுவதும் எந்த வானிலை எச்சரிக்கையும் அமலில் இருக்காது.
Haute-Corse storm warning குறிப்பாக மாவட்டத்தின் கிழக்குக் கரைப் பகுதிகளை மையப்படுத்துகிறது. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கோர்சிகா தீவில் உள்ள Cervione, Vescovato, Bastia மற்றும் Rogliano உள்ளிட்ட சில நகரங்கள் பாதிக்கப்படக்கூடும்.
செப்டம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் முழுவதும் வானம் தெளிவாகவும், வெப்பநிலை மிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாளில் புதிய வானிலை எச்சரிக்கை அறிவிக்கப்படாது என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
































