கடந்த ஜூன் மாதம் வெளியான ‘பாலன்’ படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஜித்து மாதவன். ஃபகத் ஃபாசில் தயாரித்து நடித்த ‘ஆவேசம்’ படத்தையும் அவரே எழுதி இயக்கினார். தற்போது சூர்யாவை வைத்து நகைச்சுவை கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கியுள்ளார்.
டி.எஸ்.பி. இன்பராஜாக சூர்யா
‘சீன்’ படத்தில் நஸ்ரியா நஸீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வினித் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சூஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா, சூர்யா இணைந்து தயாரித்துள்ளனர்.
சூர்யா ஏற்றுள்ள டி.எஸ்.பி. இன்பராஜ் ஐபிஎஸ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கூறுகையில், காவல் அதிகாரி வேடம் அவருக்கு புதிதல்ல என்றாலும், இந்தக் கதாபாத்திரத்தின் நக்கலும் நையாண்டியும் ரசிகர்களைச் சிரிக்கவும் சிலிர்க்கவும் வைக்கும் என்றார். தேவையான இடங்களில் சூர்யா நகைச்சுவை நடிப்பிலும் சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Suriya Scene movie சூர்யாவின் 47வது படமாக உருவாகியுள்ளது. ‘கறுப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களுக்குப் பிறகு, இந்தப் படமும் தீபாவளி வெளியீட்டு போட்டியில் களமிறங்குகிறது.




























